
நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறுகின்ற திகதிகளில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் விமானத்தில் நாடாளுமன்றத்தில் பிரவேசிக்குமாறு இலங்கை தனியார் பஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
கொள்ளுப்பிட்டி தொடக்கம் நாடாளுமன்றம் வரையிலான பாதை தற்காலிகமாக மூடப்படுவதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பின் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கை தனியார் பஸ் உரிமையார் சங்கத்தின் தலைவர் கேமுனு விஜேரத்த இதனை தெரிவித்தார்.
அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டால் பஸ்களில் பயணிக்கும் பொதுமக்கள் எதிர்நோக்கிவரும் அசௌகரியங்களுக்கு தீர்வு கிடைக்கும் எனவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment