
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் - கி - மூன் இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் 2 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அவசரமாக இந்தியாவிற்கு வரவுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதே அவரது இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது வடக்கில் இடம்பெற்று வருகின்ற யுத்த சூழ்நிலையின் கீழ் எதிர்காலத்தில் எடுக்கக் கூடிய அரசியல் தீர்வு குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், இந்திய முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment