.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Thursday, October 30, 2008

இலங்கை இந்தியாவிற்கு அடிபணிந்தே காணப்படுகிறது


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் இருதலையாக செயற்படுகிறது என ஜே.வி.பி.யின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.


ஒரு பக்கம் இந்திய அரசின் நடவடிக்கையின் பிரகாரம் செயற்படுகிறது மற்றை பக்கம் உள்ளுரில் சிலரின் அழுத்தங்களின் பிரகாரம் செயற்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று கனியவளம் சிமெந்து உற்பதி, தென்னிலங்கை புகையிரத பாதை புனரமைப்பு போன்ற நடவடிக்கைகளில் இந்தியாவின் தலையீட்டை கொண்டுள்ளது.

இதனால் நாம் இந்தியாவிற்கு அடிபணிந்து காணப்படுகிறோம் என ரில்வின் சில்வா இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

No comments: