
இலங்கை இனப்பிரச்சினையில் பாதிப்புக்குள்ளாகியுள்ள தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் நாளையதினம் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் சென்னையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்க சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி நாளை தமிழ்நாடு முழுவதும், முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் சுமார் 25 லட்சம் வணிகர்கள் பங்கேற்பதாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
சில்லரை கடைகள், மருந்து கடைகள், காய்கறி கடைகள் , தேனீர் கடைகள் தையல் கடைகள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட வியாபாரிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கடையடைப்பு செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments:
Post a Comment