.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Friday, October 31, 2008

வாகன விபத்துக்களை குறைக்க நடவடிக்கை.


வடமத்திய மாகாணங்களில் அதிகரித்துவரும் குற்றங்கள் மற்றும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மோட்டார் சைக்கிள் பொலிஸ் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இந்த பொலிஸ் பிரிவு நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டதாக வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மு.P.P. பத்திரண தெரிவித்தனர்.


குறித்த பொலிஸ் பிரிவு வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் வேண்டுக்கோளுக்கிணங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த பொலிஸ் பிரிவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர், 3 சாஜன்கள் மற்றும் கான்ஸ்டபல் 6 பேர் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதற்காக 5 மோட்டார் சைக்கிள்களை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த பொலிஸ் பிரிவு அநுராதப்புரம் மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் இயங்குவதாகவும், இது 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: