
குருநாகல் - கோகரேல்ல பிரதேசத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசன்துறை சந்திரகாந்தனின் சென்ற வாகனம் விபத்;துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று காலை 6.20 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இந்த விபத்து இன்று காலை 6.20 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து தம்புள்ளை நோக்கி சென்று கொண்டிருந்த போதே கிழக்கு மாகாண சபை முதமைச்சர் சென்ற வாகனம் இப்பலவை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த மீன் லொறியொன்றை கடக்க முயன்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த விபத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் வாகன சாரதி மற்றும் பாதுகாவலளர் ஒருவருக்கு மாத்திரமே சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுதமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தனுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர கூறினார்.

No comments:
Post a Comment