.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Friday, October 24, 2008

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் இதுதான் தண்டனை – அமைச்சர் லக்மன் யாப்பா அபேவர்தன


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் செயற்பட்ட இந்திய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் வைகோவை கைது செய்;ததன் மூலம் தீவிரவாதம் தொடர்பாக இந்திய மத்திய அரசின் நிலைபாடு தெளிவாக தெரிவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஊடக திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்; போது அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார்.
மேலும், அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தீவிரவாதத்திற்கு எதிராக இலங்கை மேற்கொண்டுவரும்நடவடிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசு ஒருபோதும் தடைவிதிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தீவிரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்காக இந்திய மத்திய அரசும் இலங்கை அரசும் ஒன்றினைந்து செயற்படுமெனவும் அவர் கூறினார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் வைகோ புலிகளுக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்ததிற்கு தமிழ் நாடு பொலிஸாரினால் தமிழ் நாடு பொலிஸாரினால் நேற்று பகல் கைது செய்யப்பட்டார். அவர் ஆற்றிய உரையின் மூலம் இந்தயாவின் இறைமை பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்து கைது செய்யப்பட்ட வைகோ, தற்போது விலக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: