.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Friday, October 24, 2008

ஐக்கிய நாடுகளுக்கான பொருளாதார மற்றும் சமூக சபையின் அங்கத்துவத்தை இலங்கை இழந்துள்ளது.


ஐக்கிய நாடுகளுக்கான பொருளாதார மற்றும் சமூக சபையின் அங்கத்துவத்தை இலங்கை இழந்துள்ளது.
தற்போது இந்த சபையின் அங்கத்துவம் வகித்துவரும் இலங்கைக்கு எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான அங்கத்துவத்தையே இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அங்கத்துவத்தை சபையில் இருந்து நீக்கி அதற்கு பதிலாக அந்த இடத்திற்கு இந்தியாவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பொருளாதார மற்றும் சமூக சபையின் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முடிவடையவுள்ளதுடன் சபையின் புதிய அங்கத்துவத்திற்கான வாக்கெடுப்புகள் நடைபெறவுள்ளது.
192 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த சபையின் பொது கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.
இதன்போது, 18 நாடுகள் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: