.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Friday, October 24, 2008

ஜனாதிபதிக்கும் மஹிந்தவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணிலும் இன்று சந்திப்பு.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பு இன்று பகல் 12.30 அளவில் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது வடக்கின் தற்போதைய நிலைகள் மற்றும் வடக்கு பிரச்சினைக்கு இந்திய அரசியல் வாதிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
விசேடமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைகள் மத்தியில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: