.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Sunday, October 26, 2008

இலங்கைக்கான இராணுவ உதவிகளை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி


இலங்கை அரசிற்கு செய்துவரும் நேர்முக மற்றும் மறைமுக இராணுவ உதவிகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அகில இந்தியச் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி. இராசா, இலங்கைக்குச் செய்யும் இராணுவ உதவிகள் எதுவாயினும் அது அங்குள்ள தமிழ் மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும் என்றும், அப்படிச் செய்வது அந்நாட்டு அரசு தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைக்கு உதவுவதாகவே கருதப்படும் எனவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையை பறிக்கும் கச்சத்தீவு ஒப்பந்தம், இலங்கை இனப்பிரச்சனை ஆகியவற்றில் மத்திய அரசு தெளிவான நிலையை எடுக்கத் தவறிவிட்டது என்று குற்றம்சாற்றினார்.
இலங்கையில் போரை நிறுத்துவிட்டு, இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண பேச்சுவார்த்தையைத் துவக்குமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று இராசா கேட்டுக்கொண்டார்.

No comments: