
மட்டக்களப்பு கொம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் சிறுவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை 6.30 அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் ஒன்றரை வயதுடைய புலேந்திரன் தேவிகா, 8 வயதுடைய சிவகுமார் சிவசூரியன் ஆகியோரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக
சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருவர் இராணுவத்தை கண்டு ஓட முற்பட்ட வேளையில் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமே தவறுதலாக இந்த சிறுவர்கள் மீது பாய்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment