
இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான் உள்ளிட்ட 7 நாடுகள் பங்கேற்கும் மாநாடு டெல்லியில் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாநாடு எதிர்வரும் 11ம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்த விஜயத்தின் போது இந்தியத் தலைவர்கள் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இந்த மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்தியத் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ சந்திப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத் தளம் ஒன்று செய்தி வெளிளியட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment