
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக நடிகர் சங்கங்கம் ஒழுங்கு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இன்று சென்னையில் நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முன்னணி நட்சத்திரங்கள் உட்பட அனைத்து தமிழக சினிமாத்துறையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த உண்ண விரதப் போராட்டத்திற்கு ரஜனி, கமல், அஜத், விஜய் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களும் கலந்துகொள்ளவர் என நடிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உண்ணாவிரதத்தில் ஒலி பெருக்கியை பயன்படுத்தி பேச தமிழக அரசு தடைவிதித்துள்ளதுடன், முன்னணி நடிகர்கள் இதில் பேச மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment