
பால் மாவின் விலையை அதிகரிக்க ஒரு போதும் இடமளிக்க போவதில்லை என நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் பால்மாவின் விலை வீழ்ச்சியடைந்த போதிலும் நாட்டில் பால்மாவின் விலையை அதிகரிக்க ஒரு போதும் இடமளிக்க போவதில்லை என அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் சில தினங்களில் பால்மா இறக்குமதி செய்வோருடன் பேச்சுவார்த்தை ஒன்றையும் நடத்த உள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
எதிர்வரும் சில தினங்களில் பால்மா இறக்குமதி செய்வோருடன் பேச்சுவார்த்தை ஒன்றையும் நடத்த உள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
பால்மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அதன் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பார்களேயாயின், வர்த்தமானிய அறிவித்தல் ஒன்றின் மூலம் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அமைச்சர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment