
வவுனியா பட்டக்காடு பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
சுட்டுக் கொல்லப்பட்டவர் 22 வயதுடைய பாலசந்திரன் அஜித் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட நபர் வேப்பங்குளம் 3 ஒழுங்கையில் தனது சகோதரியுடன் தங்கி வாழ்ந்து வந்தவர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இனம் தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த இனந்தெரியாத குழுவினரே அந்த இளைஞன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு குறித்த இடத்தில் போட்டு விட்டு சென்றிருக்கலாம் என வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment