
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனான சந்திப்பில் போது தான் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விளக்கிக் கூறியுள்ளார்.
நாட்டின் பிரச்சினைக்கு பாதுகாப்பு அடிப்படையிலான தீர்வொன்று அவசியம் எனவும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமெனவும் தான் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பாக விளக்கிக் கூறுமாறு அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரியுள்ளார்.

No comments:
Post a Comment