
நாட்டின் பிரச்சினைக்கு சமாதான பேச்சுவார்த்தையைத் தவிர வேறொரு மாற்றுத் திட்ட ஒன்றும் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
இதனையே தேசிய மற்றும் சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இன்னும் மூன்று மாத காலப்பகுதிக்குள் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அனைத்து சக்திகளுக்கும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது உறுதி எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த காலப்பகுதிக்குள் சமாதான முன்னெடுப்புக்கள் குறித்து அனைத்து சக்திகளும் அழுத்தம் கொடுக்காவிட்டால் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிணாமா செய்யவுள்ளதாக அவர் சவால் விடுத்துள்ளார்.
அதனால் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் செல்ல வேண்டிய நிலையொன்று நிச்சயமாக தோன்றுமெனக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வடக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றே சிறந்தது எனவும் சுட்டிக்காட்டினார்.

No comments:
Post a Comment