.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Friday, November 7, 2008

நாட்டை காட்டிக் கொடுப்பதை அரசாங்கம் நிறுத்திக் கொண்டுள்ளது - விமல் வீரவங்ச


இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுப்பதை நிறுத்தியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.


வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே விமல் வீரவங்ச நாடாளுமன்றத்தில் இன்று இதனைத் தெரிவித்தார்.

கைத்தொழில் துறையில் உள்ளவர்களை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் முக்கிய விடயங்கள் அனைத்திற்கும் வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதைக் கருத்திற் கொண்டு வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்க எண்ணியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

No comments: