
நாட்டின் தபால் சேவையை நவீனமயப்படுத்த வேண்டுமென தபால் சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மஹிந்த விஜேசேகர இதனைத் தெரிவித்தார்.
தபால் சேவையை நவீனமயப்படுத்துவதற்காக தாம் பல திட்டங்களை வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தபால் சேவையானது தானே இயங்கும் விதத்தில், துரிதமாக, நன்மைப் பயக்கக்கூடிய வகையில் இருக்கவேண்டுமெனவும் அமைச்சர் கூறினார்.
எனினும் 2011ம் ஆண்டளவில் தபால் சேவை மூலம் ஏற்பட்டுள்ள நட்டத்தைக் குறைத்து இலாபம் ஈட்டக்கூடிய விதத்தில் தபால் சேவையை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment