
இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக அரசாங்கம் அக்கறையுடன் செயப்படுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் வன்னிப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை - இந்தியாவுக்கிடையே தற்போது எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்து விளக்கமளிக்கும் முகமாக நேற்று முன்தினம் புதுடில்லி சென்றடைந்த பசில் ராஜபக்ஷ, பிராணாப் முகர்ஜியை சந்தித்து பேசிய போதே இந்த உறுதியைமொழியை அளித்துள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு இருப்பிடங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோரையும் பசில் ராஜபக்ஸ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தமிழக முதல்வர் கருணாநிதியுடன் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கமளித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில் சோனியா காட்டும் அக்கறைக்கு கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment