.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Monday, October 27, 2008

இலங்கையில் தமிழ்ர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.


வெள்ளவத்தை பகுதியில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் கலந்து கொள்ளாத தென்னிந்திய திரை நட்சத்திரங்களுக்கு எதிரான வகையில் கையடக்கத் தொலைபேசி மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார் என்ற காரணத்தினாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எஸ்.எம்.எஸ். மூலம் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டதாகவும், வெள்ளவத்தை பிரதேசத்தில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கணேசலிங்கம் பிரதீப் என்ற 24 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அஜித் குமார் மற்றும் அர்ஜூன் நடித்த திரைப்படங்களை புறக்கணிக்குமாறு குறித்த இளைஞன் எஸ்.எம்.எஸ் மூலம் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்தளம் பிரதேசத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைக் குண்டுதாரி என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றிய இந்த பெண் முக்கியஸ்தர் ஒருவரை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ள இருந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த அனல் மின் நிலைய நிர்மானப் பணிகளை பார்வையிட வரும் முக்கியஸ்தர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது. மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் இவரது இலக்காக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

No comments: