
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு 2009ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 7500 ரூபா சம்பள அதிகரிப்பு வேண்டும் என கோரி ஐக்கிய தேசிய கட்சி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.
வாழ்க்கைச் செலவீனம் அதிகரித்து கொண்டு செல்வதற்கேற்ப தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்க வேண்டும் என கோரியே, பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களின் வாழ்க்கை செலவை அதிகரிக்கச் செய்யும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைகல் பெரேரா தெரிவித்தார்.
வாழ்க்கை செலவு அதிகரிப்பிற்கேற்ப தொழிலாளர்களின் சம்பவளம் அதிகரிக்கப்படாமையினால் அவர்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துவதில் பொரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment