.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, October 28, 2008

இடம்பெற்றுவரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உத்தரவாதத்தை இந்திய மத்திய அரசினால் வழங்க முடியாதென இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவிப்பு.


இலங்கையில் இடம்பெற்றுவரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உத்தரவாதத்தை இந்திய மத்திய அரசினால் வழங்க முடியாதென இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்தே, இந்திய அரசு இலங்கை பிரச்சினையில் தலையிடுவதில் நாட்டம் காட்டாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமெனவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.


அத்துடன், பல வருடங்களாக இலங்கையில் இடம்பெற்றவரும் இனப்பிரச்சினைக்கு இந்திய தமிழக அரசாங்கம், இதுவரை சரியான தீர்வொன்றை முன்வைக்கவில்லை எனவும் அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.


இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் பிரச்சினைகளுக்கு தமிழக அரசு தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனவும், இலங்கையின் பிரச்சினையை அந்த நாட்டு தலைவர்களே தீர்க்க வேண்டும் எனவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

No comments: