
கடந்த 40 நாட்களில் கடத்தப்பட்டதாக அல்லது காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த 29 பேரில் 17 பேர் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழு இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
பலர் வேலை வாய்ப்பு மற்றும் ஏனைய காரணிகளுக்காக குறித்த பிரதேசங்களைவிட்டு இரகசியமாக வெளியேறியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக அந்தக்குழு கூறுகிறது. கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள ஏனையவர்கள் பற்றிய விசாரணைகளையும் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், வீடு திரும்பியுள்ளதாக கூறப்படும் அனைவரது பெயர்களையும் பொலிஸார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment