முருங்கன் பஸ் தரப்பு நிலையத்தில் இரண்டு இளைஞர்கள் விஷேட அதிரடிப்படையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் நேற்று காலை 8 மணியளவில் இலங்கையின் வடமத்திய மாகாணமான அநுராதப்புரம் - மதவாச்சிக்கு செல்வதற்காக பஸ் தரப்பிடப் பகுதியில் அழைந்து திரிந்ததால் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் குறித்த பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த முஸ்லிம் இளைஞனை அழைத்து இவர்களை தெரியுமா என அதிரடிப்படையினர் கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த இளைஞன் தெரியாது என கூறியதை அடுத்து விஷேட அதிரடிப்படையினர் அந்த இளைஞர்கள் இருவரையும் கடுமையாக அடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 2 இளைஞர்களையும் விசாரித்த விஷேட அதிரடிப்படையின் லேப்டினன் அந்த இளைஞர்களில் ஒருவரை பொதுமக்களுக்கு முன்பாக ஆடைகளை கலற்றி அவமானப்படுத்தியுள்ளார்.
இதனை கேட்ட ஏனைய சகோதரனையும் தாக்கியதுடன், அந்த இளைஞர்கள் இருவரையும் விடுத்துள்ளனர்.
இந்த விஷேட அதிரடிப்படையினர் மன்னார் மாவட்டத்தில் இசைமாலத்தாழ்வு பகுதியிலுள்ள காவலரணில் கடமை புரிவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிரடிப்படையினரின் இந்த அவமான செயல் குறித்து குறித்த இளைஞர்கள் நேற்று மன்னார் சகவாழ்வு மன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இளைஞர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment