
இந்திய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்ததாக கூறி கைது செய்யப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோவையும், அக்கட்சியின் அவைத்தலைவர் மு.கண்ணப்பனையும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் "ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் உரையாற்றிய வைகோ, இலங்கைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடவும் தயங்கமாட்டோம் என கூறியதாகவும், இதே கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கண்ணப்பன், தனித் தமிழ்நாடு விரைவில் உருவாகும் என கருத்து தெரிவித்ததாகவும் கூறியே இவர்கள் இருவரும் கடந்த மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் இருவரையும் 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment