.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Saturday, November 8, 2008

பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவானமை இனவாத கொள்கையில் மூழ்கியுள்ள நாட்டுத் தலைவர்களுக்கு ஒரு பாடம் - மனோ கணேசன் MP


பரக் ஒபாமா அமெரிக்காவின் பதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை இனவாத கொள்கைகளில் மூழ்கியிருக்கும் உலகத் தலைவர்களுக்கு ஓர் பாடமாக அமைந்துள்ளதென மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நீண்ட காலமாக பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வரும் தமிழ் பேசும் மக்கள் ஒபாமாவின் வெற்றியை எதிர்பார்ப்புடன் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் ஏற்பட்ட மாற்றத்தைப் போன்று இலங்கையில் யுத்த இருள் நீங்கி சமாதான ஒளி படர வழியமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உலகில் உள்ள இன சமூகங்கள் அனைத்திற்கும் ஓர் புதிய எதிர்பார்ப்பை ஒபாமாவின் வெற்றி ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த ஆபிராஹம் லிங்கன் மற்றும் மார்டீன் லூதர் கிங் ஆகியோரின் கனவு இன்று மெய்ப்பட்டுள்ளதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: