.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Sunday, November 2, 2008

மேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கு தமது கட்சி தயார் - மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் MP


விரைவில் கலைக்கப்படவுள்ள மேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மேலக மக்கள் முன்னணி தயாராக இருக்கின்றது என அந்த கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் குறித்து தமது கட்சியின் அரசியல் பீட உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சம்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டதாகவும், இந்த தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் கூட போட்டியிட்டிருந்த ஏனைய மலையக கட்சிகளை விட பெரும் வித்தியாசத்தில் அதிக வாக்குகளைப் பெற்றிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.

No comments: