.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Monday, November 3, 2008

வரவு செலவுத் திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பில் அரசாங்கத்தை தோல்வியடையச் செய்ய ஐக்கிய தேசியக் கட்சி சதித்திட்டம் என்கிறார் விமல் வீரவன்ச.


2009ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பின் போது, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை தோல்வி அடைய செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.


தேசிய சுதந்திர முன்னணியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கும் வைபத்தின் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அதன் தலைவர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்தார்.


நாடாளுமன்ற உறுப்பினர்களை எந்த முறையிலாவது தமது பக்கம் இழுத்துக் கொள்வதன் மூலம், வரவு செலவு திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பில் அரசை தோல்வியடையச் செய்ய ஐக்கிய தேசிய கட்சி ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


அத்துடன், வடக்கில் இராணுவத்தினர் வெற்றிகரமாக தீவிரவாதத்தை தோல்வியடையச் செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில், வெளிநாட்டு சக்திகளும் மற்றும் எதிர்கட்சிகள் அனைத்தும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க முயற்சிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.


எனினும், அரசுக்கு எதிராக எவ்வாறான சதித்திட்டங்களை செய்தாலும் அதனை தோல்வி அடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை தேசிய சுதந்திர முன்னணி மேற்கொள்ளுமென விமல் வீரவன்ச தெரிவித்தார்.

No comments: