.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Thursday, November 13, 2008

காலி பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


காலி பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் முகமாக விஷேட தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருவதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது காலி நகருக்குள் நுழையும் பஸ், ரயில் உட்பட அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தேடுதல் நடவடிக்கையானது எதிர்வரும் இரு வாரங்களுக்கு தொடர்ச்சியாக மேற்கொள்ள பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்டுள்ளனர் என எமது செய்தியாளர் மேலும் கூறினார்.


No comments: