.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, November 4, 2008

லிபியாவில் இலங்கைக்கான தூதரகம் அமைக்க இலங்கை அரசு முடிவு.


லிபியாவில் இலங்கைக்கான தூதரகம் ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சரும் பாhதுகாப்பு விவகார பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


இலங்கைக்கும் லிபியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த தூதரகத்தை நிறவவுள்ளதாகவும் அவர் கூறினார்.


அத்துடன், இலங்கையிலுள் ஹோட்டல் பயிற்சி பாடசாலைகளுக்கு ஒத்த ஹோட்டல் பாடசாலை ஒன்றை லிபியாவில் நிறுவுள்ளதாகவும் அமைச்சரும் பாhதுகாப்பு விவகார பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

No comments: