.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Saturday, November 1, 2008

நாகர்கோவில் செம்பியன்பற்று பிரதேசத்தின் மீது விமானப் படையினர் தாக்குதல்


யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள செம்பியன்பற்று பிரதேசத்தின் மீது விமானப் படையினா தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.


இந்த தாக்குதலானது இன்று காலை 8.30 அளவில் மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் விங்கொமான்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை தாக்குதல் மேற்கொள்ள வந்துள்ளதாகவும் கடற்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே இந்த விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இதன்போது விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான படகுகள் பல அழிக்கப்பட்டதாகவும் விமானப்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments: