.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Friday, November 7, 2008

இலங்கையில் கேஸின் விலை குறைவடைந்துள்ளது


எதிர்வரும் மாதத்திலிருந்து கேஸின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.


அலரிமாலிகையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விசேட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துள்ள குணவர்தன ஜனாதிபதியிடம் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.


இதன்போது, நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவு தட்டுப்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


அரிசியை பதுக்கி வைத்து விநியோகம் செய்வோருக்கு எதிராக நிலையான சட்டம் ஒன்றை அமுல்படுத்த உள்ளதாகவும் இந்த கலந்துரையாடலின் போது முக்கிய விடயமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments: