
கல்முனை – மருதமுனை பிரதேசத்தில் உள்ள இளம் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் கடந்த செவ்வாய்கிழமை 12 மணியளவில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
27 வயதுடைய இரமுளார் பைரூஸ் மற்றும் 25 வயதுடைய முகம்மது றிஸ்வான் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்டவர்கள் ஆயுததாரிகளாளேயே கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், ஆயுததாரிகளின் பிடியிலிருந்து இவர்களில் ஒருவர் தப்பி வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கடத்தப்பட்டவர்கள் கல்முனை பிரதேசத்தில் இறைச்சி வியாபாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கடத்தல் தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment