.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Monday, November 3, 2008

புலிகளின் சடலங்கள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு கூறுகிறது


வடபகுதியில் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.


இரு பிரிவினருக்கும் இடையில் நேற்றைய தினம் கடும் மோதல்கள் இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதுpகளில் மட்டுமன்றி பூநகரியிலும் மோதல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் இராணுவத்தினரால் அங்கு மேற்கொண்ட தேடுதல்களின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.


மீட்கப்பட்ட சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: