.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Thursday, November 13, 2008

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியை திறக்கப்படவுள்ளது.


மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியை இன்னும் சில நாட்களில் திறக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த வீதியின் 24 கிலோ மீற்றர் வரையிலான பகுதியை படையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலவரங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

இந்த வீதியின் தூரத்தின் அளவு 80 கிலோ மீற்றர் என பாதுகாப்பு விவகார பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.

இந்த பாதை கைப்பற்றியதை தொடர்ந்து, மேற்பகுதியில் தற்போது உள்ள விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தையும் குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பாதையானது இரண்டு தசாப்த காலங்களுக்கு அதிகமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும். பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

No comments: