
வன்னி போர் முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் பரஸ்பர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சிலதினங்களாக இடம்பெற்ற மோதல்களின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான உறுப்பினர்களது சடலங்கள் பலவற்றை பாதுகாப்பு தரப்பினர் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலங்களை பாதுகாப்பு தரப்பினர் மன்னார் வைத்தியசாலைக்கு ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட 12 சடலங்களை பாதுகாப்பு தரப்பினர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த 12 சடலங்களையும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் இன்று நண்பகல் அளவில் ஓமந்தை சோதனைச் சாவடியூடாக தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சரசி விஜேரத்ன தெரிவித்தார்.

No comments:
Post a Comment