
வவுனியா – இரட்டைப்பெரியகுளம் பிரதேசத்தில் வெடி பொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை நேற்றைய தினம் இரட்டைப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் வைத்து கைதுசெய்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மன்னாரை பிறப்பிடமாகக் கொண்ட குறித்த பெண்ணிடமிருந்து ஊ 4 ரக வெடிபொருள் 500 கிராம், டெட்டனேட்டர் 2 மற்றும் நேரக்கணிப்பு கருவி ஒன்று ஆகியவற்றை மீட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மத்திய நிலையம் மேலும் கூறியுள்ளது.

No comments:
Post a Comment