
ஓமந்தை சோதனைச் சாவடி பகுதியில் தொடர்ந்;தும் இரண்டாவது நாளாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் கண்காணிப்பு பணிகளில் இருந்து விலகிக்கொண்டுள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதி ஓமந்தை சோதனைச்சாவடி பகுதியில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் அங்கு காணப்படும் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே தமது ஊழியர்கள் கண்காணிப்பு பணிகளில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடகப் போச்சாளர் சரசி விஜயரட்ன தெரிவித்தார்.
தமது ஊழியர்களின் பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகளிடமும், அரசு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தைகளை நடத்திவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், வன்னி பிரதேசத்திலுள்ள மக்களுக்கு வேண்டிய மனிதாபிமான நடவடிக்கைகயில் தமது ஊழியர்கள் ஈடுபட்டுவருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், வன்னி பிரதேசத்திலுள்ள மக்களுக்கு வேண்டிய மனிதாபிமான நடவடிக்கைகயில் தமது ஊழியர்கள் ஈடுபட்டுவருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், ஓமந்தைச் சோதனைச் சாவடி ஊடாக அம்புலன்ஸ் வண்டிகள் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்துள்ளதுடன், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சொந்தமான சடலங்களை கையளிக்கும் நடவடிக்கைகளில் வழமைபோல் தமது உறுப்பினர்கள் மேற்கொள்ளவர் எனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜயட்ன குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment