.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Friday, November 7, 2008

கல்முனை – மருதமுனை பிரதேசத்தில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.


கல்முனை – மருதமுனை பிரதேசத்தில் காணாமல் போன இளம் வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


இவருடைய சடலம் நேற்று கல்முனை பொலிஸாரால் மீட்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.


கல்முனை – மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடந்த செவ்வாய்கிழமை காணாமல் போயுள்ளதாக கல்முனை பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டிருந்து.


27 வயதுடைய இரமுளார் பைரூஸ் மற்றும் 25 வயதுடைய முகம்மது றிஸ்வான் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கடத்தப்பட்டவர்களில் ஒருவர் ஆயுததாரிகளிடமிருந்து தப்பி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தப்பிவந்தவரிடமிருந்து பெற்ற தகவலின் அடிப்படையில், ஆயுததாரிகளில் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, மற்றையவர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ள தகவல் கிடைத்துள்ளது.


அதையடுத்து, குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதலை அடுத்து புதைக்கப்பட்ட நிலையில் சடலம் கல்முனை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


இவ்வாறு கொல்லப்பட்டவர் மருதமுனை பிரதேசத்தை வசிக்கும் 27 வயதுடைய இரமுளார் பைருஸ் என கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: