.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, November 4, 2008

கடந்த செவ்வாய்கிழமை விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் வெற்றியளிக்கவில்லை என்கிறார் பிரமதர்.


மன்னார் தள்ளாடி முகாம், களனிதிஸ்ஸ மின் பரிமாற்று நிலையம் ஆகியவற்றின் மீது குண்டுகளை போட்டதன் மூலம் விடுதலைப் புலிகளின் நோக்கம் நிறைவேறவில்லை என பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.


இராணுவத்தினர் மிக அவதானமாக இருப்பதனாலேயே விடுதலைப் புலிகளுக்கு அவர்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாதுள்ளதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.


விடுதலைப் புலிகளின் தயாக ப+மியான கிளிநொச்சி வாசலில் இராணுவத்தினர் தற்போது நிலை கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


விடுதலைப் புலிகள் இரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தி இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.


எனினும், அந்த தாக்குதல்களை கூட இராணுவம் வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாக பிரதமர் கூறினார்.
இந்த தாக்குதல்களுக்கு மத்தியிலும் வடக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

No comments: