.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Thursday, November 13, 2008

யாழ். திருநெல்வெளி பிரதேசத்தில் தாயும் மகனும் வெட்டப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பிரதேசத்தில் நேற்றிரவு ஆயுததாரிகளால் வெட்டப்பட்ட நிலையில் தாயாரும் அவரது மகனும் படுகாயமடைந்துள்ளனர்.


திருநெல்வேலி கலாசாலை பிரதேச வீடொன்றில் புகுந்த ஆயுததாரிகள் கூறிய ஆயுதமொன்றினாலேயே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின் பின்னர் மீட்கப்பட்ட இவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாண பிரதேசத்தில் இரவு நேரத்தில் கொள்ளையர்கள் வீட்டு உரிமையாளர்களை தாக்கி விட்டு உடமைகளை கொள்ளையிட்டு செல்வதாக அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: