.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Saturday, November 8, 2008

வன்னியில் உள்ளக இடம்பெயர்வுகள் தொடர்கின்றன


வன்னியில் பூநகரி, செம்மன்குன்று பகுதிகளில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்களில் 12 ஆயிரம் பேர் வரையில் மீண்டும் இடம் பெயர்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் பரஸ்பர மோதல்களை அடுத்தே இந்த மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிராஞ்சி வலைப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் ஷெல் வந்து வீழ்ந்தமையினால் மக்கள் செம்மன்குன்றுப் பகுதிக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.
தற்போது செம்மன்குன்று பகுதியினை நோக்கியும் செறிவான ஷெல் தாக்குதல் நடத்தப்படுவதனால் அங்கிருந்தும் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே இடம்பெயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: