
புனித மடு மாதா தேவாலயத்திற்கு இதுவரையில் மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேவாலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நலனைக் கருத்திற் கொண்டு உடனடியாக மின்சார வசதிகளை ஏற்பாடு செய்யுமாறு தேவாலய நிர்வாகத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவிடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் தெற்கு மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு மடு திருத்தலத்திற்கு வருகை தர முடியும் எனவும், அதற்கு அனுமதியளிக்குமாறும் அமைச்சரிடம் தேவாலய நிர்வாகம் கோரியுள்ளது.

No comments:
Post a Comment