
கொழும்பு – வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து பாடசாலைச் சிறுவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
இந்த சிறுவன் நேற்றைய தினம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
வெள்ளவத்தை – சுந்ரா மாவத்தையில் வசிக்கும் விஜயகுமார் ரதீஸ் என்ற சிறுவனே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர மேலும் தெரிவித்தார்.
பம்பலப்பிட்டி – சென். மரியா தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் குறித்த சிறுவன், பாடசாலை விட்டு வீடு திரும்பும் வேளையிலேயே கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் கூறினார்.

No comments:
Post a Comment