.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Friday, November 14, 2008

தற்கொலை குண்டுதாரிகள் தொடர்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


வடமத்திய மாகாண சபை எதிர்கட்சி தலைவர் ஜனக்க பெரேரா உட்பட 29 பேரின் கொலைகள் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இந்த புலனாய்வுகளை மேற்கொள்ள பொதுமக்களின் உதவிகளை நாடவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண சபை எதிர்கட்சி தலைவர் உட்பட 29 பேரின் கொலைகளுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகளின் தகவல்களை அறிந்தவர்கள், பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: