
இரத்தினபுரி – கஹவத்தை பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளளர்.
இவர்களை நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
கஹவத்தை பிரதேசத்தில் இரத்தினபுரி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமில் நீண்ட நாட்கள் பயிற்சி பெற்றவர்கள் எனவும், இவர்கள் கிளைமோர்களை வெடிக்கச் செய்வதில் விசேட திறமை உள்ளவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இவர்களிடம் மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment