.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Monday, November 3, 2008

அவிஸ்சாவெல பிரதேசத்தில் தீவிபத்து


அவிஸ்சாவெல – கிரிவந்தல பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.


இந்த தீவிபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றதாக அவிசாவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீவிபத்தினால் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த தீவிபத்தினால் சுமார் ஒரு கோடி வரை நட்டம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுவதுடன் தீவிபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: