.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Monday, November 3, 2008

இலத்திரனியல் வாகன அனுமதிப் பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இலத்திரனியல் முறையிலான வாகன சாரதி அனுமதி பத்திரத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் வாகன பதிவுகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதன்படி, இந்த இலத்திரனியல் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மோட்டார் வாகன பதிவுகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் னு.விஜயரத்ன தெரிவித்தார்.


லேசர் அச்சு முறை ஒன்றினால் தயாரிக்கப்படும் இந்த புதிய வாகன சாரதி அனுமதி பத்திரத்திரமானது அனைத்து வளைபின்னல்களுடனும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன் முதற்கட்டமாக 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் வாகன சாரதி அனுமதி பத்திரமே, ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார்.


அத்துடன், நீண்டகாலமாக வாகன சாரதி அனுமதி பத்திரம் பெற்றுள்ள சாரதிகள் தொடர்பாக பின்னர் தீர்மானிக்கப்படுமெனவும் வருவதாக மோட்டார் வாகன பதிவுகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் னு.விஜயரத்ன மேலும் தெரிவித்தார்.

No comments: