.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Monday, November 3, 2008

இலங்கையில் சுனாமி ஆபத்து இல்லை


இலங்கையில் பூமி அதிர்ச்சியோ அல்லது சுனாமி அனர்த்தத்திற்கான அறிகுறியே இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடந்த 24 மணித்தியாலத்திற்குள் இலங்கை தீவில் சுனாமி ஏற்படும் வகையில் பூமி அதிர்ச்சி ஏற்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் S.R. ஜயசேகர தெரிவித்தார்.

இதன் காரணமாக நாட்டின் கரையோர பிரதேசங்களிலுள்ள மக்கள் அச்சப்பட தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், இன்று முற்பகல் வேளையில் காலி, ரத்கம பிரதேசத்தில் சுனாமி ஏற்பட்டதாக வதந்திகள் பரவியதால் அங்கு பதற்றம் நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வதந்தியை அடுத்து குறித்த பிரதேசத்தில் உள்ள பெற்றோர் அங்குள்ள பாடசாலைகளுக்குள் புகுந்து தங்களது பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments: